வருங்கால கணவரின் தோற்றத்தை கிண்டல் செய்த நெட்டிசன்கள்! வரலட்சுமியின் தரமான பதிலடி
நடிகை வரலட்சுமி தனது வருங்கால கணவரின் தோற்றத்தினை கிண்டல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை வரலட்சுமி
பிரபல நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்களாக இருந்த நிலையில், பின்பு காதலித்து தற்போது திருமணம் செய்ய உள்ளனர்.
நடிகை வரலட்சுமிக்கு தற்போது 39 வயதாகின்றது. இவரது காதலன் நிக்கேலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் ஆவார். தற்போது 43 வயதாகும் நிக்கேலாய்க்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.
பணத்திற்காக திருமணம் செய்வதாக பேசியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார் வரலட்சுமி.
தோற்றத்தை கிண்டல் செய்த நெட்டிசன்கள்
நடிகை வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்த நிலையில், பின்பு வருங்கால கணவருடன் டேட்டிங் சென்ற புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.
இதனை அவதானித்த நெட்டிசன்கள் நிக்கோலாய் தோற்றத்தை பார்த்து கிண்டல் செய்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வரலட்சுமி, தன்னுடைய காதலர் என் பார்வைக்கு மிகவும் அழகானவர் என சரமாரியாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |