Dance Jodi Dance: ரூ.2500-க்காக ரோட்டுல டான்ஸ் ஆடினேன்.. வரலட்சுமியின் கடந்த காலம்
ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடு ரோட்டில் டான்ஸ் ஆடிய ரகசியத்தை உடைத்துள்ளார்.
நடிகை வரலட்சுமி
தமிழ் சினிமாவில் நாட்டாமை சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் நுழைந்தவர் தான் நடிகை நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இவர், சினிமாவில் நடிக்க முதலில் பெற்றோர்கள் அனுமதி கொடுக்கவில்லையாம். இதனால் முன்னணி இயக்குநர்களின் பட வாய்ப்புகள் தவிர விடப்பட்டுள்ளதாக பேட்டிகளில் கூறியுள்ளார். அதன் பின்னர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தில் நாயகியாக நடித்திருப்பார்.
இதனை தொடர்ந்து, தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
தெருவில் ஆடினாரா?
இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற 25 வயது நிரம்பிய பெண், தன்னுடைய 3 குழந்தைகளுக்காக டான்ஸ் ஆடுகிறார். அப்போது அவர், “எனக்கு ம்யூசிக் கேட்டாலே டான்ஸ் தன்னால வந்துடும். இதுவரையிக்கும் நான் ரோட்டில் தான் டான்ஸ் ஆடி இருக்கேன்” என உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
இதனை கேட்ட வரலட்சுமி, “நான் ஒரு உண்மையை சொல்கிறேன். இதுவரைக்கும் யாரிடமும் அவர் சொன்னது இல்லை. இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதையும் தாண்டி திறமையை வெளிக்காட்டக் கூடிய ஒரு டான்ஸ் நிகழ்ச்சி. அதனால் சொல்கிறேன், நான், சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாக நான் ரூ.2500 ரூபாய்க்கான முதன் முதலில் ஒரு ஷோவில் ரோட்டில் டான்ஸ் ஆடினேன்.
மேலும் பேசிய அவர், ரோட்டில் ஆடுகிறோம் என்று தப்பா நினைக்காதீங்க. நான் ஆரம்பித்தது ரோட்டில் தான் டான்ஸ் ஆடினேன். ஆகையால் கண்டிப்பாக நீங்களும் பெரிய இடத்திற்கு வருவீங்க..” என அனுபவத்துடன் கூடிய நம்பிக்கையை கொடுத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |