பொது வெளியில் நடிகை மிரட்டிய சிறுவன்- சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சுஜாதா ஓபன் டாக்
“என்னை ரொம்ப மோசமா திட்டுறாங்க..” என சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சுஜாதா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை சுஜாதா
சசிகுமார் இயக்கத்தில் வெளியான “ஈசன்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சுஜாதா.
இவர், அந்த திரைப்படத்தில் “ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளுயா..” என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்.
நடன இயக்குநராக பல முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றியிருந்தாலும், சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் சுஜாதா சின்னத்திரையிலும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பொது வெளியில் மிரட்டிய சிறுவன்
இந்த நிலையில், சமீபத்தில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, “ஈசன் படத்தில் நடித்திருந்தாலும், அந்த திரைப்படத்தில் பெறாத வரவேற்பை சிறகடிக்க ஆசை சீரியல் தேடி தந்துள்ளது. இந்த சீரியலில் நடிக்க வந்த குறைந்த நாட்களிலேயே பிரபலமாகி விட்டேன்.
குறைந்த எபிசோட்களில் நடித்தாலும் மக்கள் என்னை பார்த்து அடையாளம் கண்டு திட்டுகின்றனர். “ஏன்மா நீ மீனாவை இந்த பாடு படுத்துற” என்றும் கேட்கின்றனர். இந்த சீரியலில் நடித்த பிறகு எனது நண்பர்கள் பலரும் எனக்கு போன் செய்து இதுதான் எனக்கு பிடித்த சீரியல் என வாழ்த்துவார்கள்.
அதே போன்று ஒரு நாள் நான், வெளியில் ஒருவரின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தேன். அப்போது ஒரு சிறுவன் என்னிடம் வந்து, “நீங்க ஏன் மீனாக்கிட்ட பிரச்சினை பண்றீங்க..” எனக் கேட்டார். அந்த சிறுவனை பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது...” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |