வனிதா ட்விட்டரில் பதிவிட்ட ஒற்றை புகைப்படம்; இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டீர்களா? என கேட்கும் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மீண்டும் பிரபலமானவர் நடிகை வனிதா.
தற்போது, தியாகராஜன் தன் மகன் பிரசாந்தை வைத்து இயக்கி வரும் அந்தகன் படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையடுத்து, ஷூட்டிங்ஸ்பாட்டில் ஹரிதா என்பவர் ஒரு ஓவியம் வரைந்து வனிதாவுக்கு அன்பு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து வனிதா ட்விட்டரில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், அந்த ட்வீட்டில் அவர் இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த ஒரு வார்தையை பார்த்துவிட்டு என்ன வனிதா அக்கா இஸ்லாத்திற்கு மாறிவிட்டீர்களா என்று சமூக வலைதளவாசி ஒருவர் கேட்டார்.
அதற்கு, தன் ஆதரவாளர்கள் என்ன கேட்டாலும் பதில் அளிக்கும் வனிதா அந்த நபருக்கும் பதில் அளித்தார். நான் ஒரேயொரு சக்தியை தான் நம்புகிறேன் என்றார் வனிதா.
I believe in one supreme power... https://t.co/DpQlXb8oTo
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) April 16, 2021
A sweet girl Haritha made this for me in the shooting spot..my day is made.. inshallah pic.twitter.com/xL52VPfFN6
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) April 15, 2021