எடையை அதிகரித்த வனிதா! அவரின் அடுத்த பிளேன் என்ன தெரியுமா? மிரண்டு போன ரசிகர்கள்
எடையை குறைத்து நடித்து வந்த வனிதா விஜயகுமார் அடுத்ததாக போலீஸ் கெட்டப்பில் எடையை கூட்டி மிரட்ட உள்ளார்.
கேரளாவில் வனிதா விஜயகுமார் நடித்து வரும் புதிய படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் வனிதா விஜயகுமார் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மேலும், அந்த புகைப்படங்களுடன் கேப்ஷனாக கெட்ட போலீஸாக புதிய படத்தில் நடித்து வருகிறேன் என்பதையும் வனிதா விஜயகுமார் அறிவித்துள்ளார்.
போலீஸ் உடையில் கம்பிரமாக வனிதா விஜயகுமாரை பார்த்த அவரது ரசிகர்கள் அப்படியே ஃபிட்டா போலீஸ் மாதிரியே இருக்கீங்க அக்கா என பாராட்டி வருகின்றனர்.
வனிதா விஜயகுமார் எந்தவொரு போஸ்ட் போட்டாலும், அதற்கு கீழ் ட்ரோல்களும் குவியத் தொடங்கி விடும்.
