வனிதா மகள் கொடுத்த சர்ப்ரைஸ்! Foreigner உடன் திருமணமா? குழப்பத்தில் ரசிகர்கள்
வனிதாவின் மகள் ஜோவிகா, வெளிநாட்டவரை திருமணம் செய்ய போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் தான் வனிதா விஜயகுமார்.
இதனை தொடர்ந்து பெரியளவு படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 3 திருமணங்கள் செய்து விட்டு சர்ச்சையாக நாயகியாகவே மாறி விட்டார்.
சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.
வனிதா மகளின் காதலர் எங்குள்ளவர் தெரியுமா?
இந்த நிலையில் வனிதாவ விஜயகுமார் அவரின் மகள் ஜோவிகாவுடன் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது, தன்னுடைய மகளுடன் நான் கோவாவிற்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, ஜோவிகா வனிதாவிடம் “நா ஒரு வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்?” என கேட்டுள்ளார்.
இந்த கேள்விக்கு வனிதா வண்டியை நிறுத்தி விட்டு ஷாக்கில் ஜோவிகாவை பார்த்துள்ளாராம். மேலும் மகளுக்கு ஒரு காதல் இருந்தால் அதனை நான் ஏற்றுக் கொள்வேன்.
ஆனால் முதல் காதலை திருமணம் செய்து கொள்ள நான் அனுமதிக்கமாட்டேன்..” என கூறியுள்ளார். இவ்வாறு வனிதா கூறியது அவரின் கடந்த காலங்களை ஞாபகப்படுத்தியுள்ளது..என ரசிகர்கள் முனுமுனுத்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |