உங்க வேலைய பாருங்க! 4வது திருமண வதந்தி? கடும் கோபமாக பதிலளித்த வனிதா விஜயகுமார்
தனக்கு 4வது திருமணம் ஆனதாக வரும் செய்தி வதந்தி என வனிதா கூறியதை விமர்சித்த பெண்ணை அவர் திட்டி தீர்த்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் நான்காவது திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியான நிலையில் அது வதந்தி எனவும் அதில் உண்மையில்லை எனவும் அவர் மறுப்பு தெரிவித்தார்.
அவரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு கீழே ருனா என்ற பெண் வெளியிட்ட பதிவில், இந்த வதந்தி ஒருநாள் உண்மையானால், இது என் வாழ்க்கை, தயவுசெய்து தலையிட வேண்டாம். நான் என் மகள்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறோம் என வனிதா சொல்வார் என தெரிவித்திருந்தார்.
அப்பெண்ணின் கருத்து வனிதாவை கோபமடைய வைத்தது. இதையடுத்து அதற்கு பதில் டுவீட் செய்த வனிதா, அப்படி நடந்தாலும், நாங்கள் உங்களுக்கு அல்லது யாருக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை. நீ முட்டாள்தனமாக பேசுகிறாய், உன் வேலையை பார் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
If so if I and my daughter's are happy about it then be it...we need not answer u or anyone..you blabbing idiot... listen to yourself you moron..mind your own business https://t.co/wWpyOrfBxF
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 10, 2021