என்னை ஏன் இப்படி அசிங்கப்படுத்துற- வனிதாவிடம் சீறிப் பாய்ந்த ராபர்ட்
நடிகை வனிதா
பழம் பெரும நடிகர் விஜயகுமாருக்கும், நடிகை மஞ்சுளாவின் மகள் தான் நடிகை வனிதா. ஆனால், கடந்த சில நாட்களாக இவர் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் திகழ்ந்து வருகிறார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இதன் பிறகு, பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துகொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவரை விவகாரத்து செய்து விட்டார்.
இதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த வனிதா, 2கே காதல், காத்து, அநீதி, அந்தகன், ரஜினி, பிக்கப் டிராப் என பல படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அதேபோல் நடன இயக்குநர் ராபர்ட் பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸில் நடிகை ரக்சிதாவை ஒருதலையாக காதலித்தார். இதனால், ராபர்ட் மாஸ்டர் சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறினார்.
வனிதாவிடம் சீறிப் பாய்ந்த ராபர்ட்
இந்நிலையில், ஒரு தனியார் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் நடிகை வனிதாவும், அவரின் முன்னாள் கணவருமான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டும் கலந்து கொண்டனர்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் வனிதாவும், ராபர்ட்டும் ஒருவரையொருவர் கேள்விக் கேட்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த நேரத்தில், என்னை பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று ராபர்ட் கேட்க, அதற்கு வனிதா பேசுகையில், நீ ரொம்ப நல்லவர். இதை நான் என் நண்பர்களிடமே சொல்லியிருக்கிறேன். என்னிடம் நிறைய பேர் வந்து கேட்டாங்க. என்ன.. ராபர்ட் பிக்பாஸ் போறதற்கு உதவி செய்றீங்க. நீ அவரைப் பற்றியெல்லாம் பேசவே கூடாதுன்னு என் நண்பர்கள் சொன்னார்கள். உன்னைப் பற்றியெல்லாம் அவர் தப்பு தப்பா பேசினாரு.
நான் அந்த பேட்டியெல்லாம் பார்க்கவில்லை. எவ்ளோ பேர் வேலை செய்கிறார்கள். சம்பாதித்த காசை ஊதாரிதனமா செலவு செய்துவிடுவாங்க. சில பேர் டாஸ்மாக் போல போய் செலவு பண்ணிடுவாங்க. ஆனா நீங்க அப்படி இல்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் கொண்டு வந்து கொடுத்துடுவீங்க. நான் உங்களை எந்த இடத்திலும் விட்டுகொடுத்தது இல்ல என்றார்.
இதன் பிறகு பேசிய ராபர்ட் என்னிடம் நீ ஒரு கேள்வி கேட்கவே இல்லை. என்னை கூப்பிட்டு வந்து இப்படி அசிங்கப்படுத்துற. உடனே வனிதா ஷாக்காக, அதெல்லாம் ஒன்றும் இல்லை.. அரசியல் பற்றிய கேள்வி என்னிடம் கேட்கவில்லையே.. அதைத்தான் கேட்கிறேன். எனக்கு அரசியல் வர சின்ன ஆசை உள்ளது என்று ராபர்ட் பேசினார்.