ராபர்ட் மாஸ்டரின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரச்சிதா! அட்டகாசமான ப்ரொமோ காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், ரச்சிதா தற்போது இந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஐந்து போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். வரும் ஞாயிறு கிழமை இதன் ஃபைனாலே நடைபெற உள்ளது.
இதில் வெற்றிபெறும் போட்டியாளர் அசீம் வின்னராக வருவார் என்று எதிர் பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் கதிரவன் பணமூட்டையை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
இது கடைசி வாரம் என்பதால் எந்தவொரு சண்டையும் இல்லாத டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ள நிலையில், அனைவரும் தங்களது கருத்துக்களை கூறினர். அப்போது ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டர் வைத்த காதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.