காதல் திருமணம்... இனி விவாகரத்திற்கு வாய்ப்பே இல்லை: ஷாக் கொடுத்த வனிதா
இனி என் வாழ்வில் விவாகரத்திற்குப் பேச்சியில்லை இது தான் என் கடைசித் திருமணம் என வனிதா பேட்டி ஒன்றில் சொல்லிய விடயம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
வனிதா
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார். முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள். வனிதாவின் முதல் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடால் பிரிய அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்துக் கொண்டார். ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது
பின்னர் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதையடுத்து பிரபலமடைந்த அவர், தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 1 இன் வெற்றியாளராகினார். அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இனி விவாகரத்து இல்லை
இந்நிலையிலும் பல பல சர்ச்சையில் சிக்கியிருக்கும் வனிதா அண்மையில் பேட்டி ஒன்றில் திருமணம் பற்றியும் பேசியிருக்கிறார்.
குறித்த பேட்டியில் தான் மீண்டும் திருமணம் செய்துக் கொண்டதாக சொல்லியிருக்கிறார் இதனைக் கேட்டு அதிர்ந்துபோன பின்னர் ஆறுதல் அளிக்கும் வகையில் பதில் கொடுத்திருக்கிறார்.
ஆம், தான் இப்போது சினிமாவைத் தான் அதிகம் காதலிப்பதாகவும் அதைத் தான் திருமணம் செய்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், சினிமாவில் தான் என்னுடைய கவனம் முழுவதும் இருக்கிறது அதனால் இந்த தடவை விவாகரத்திற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |