துயரங்களுடன் போராடி அமைதியாகி வீட்டீர்களா? வனிதா விஜயகுமாரின் கண்கலங்க வைத்த பதிவு!
பீட்டர் போலின் மரணம் குறித்து அவரின் இரண்டாவது மனைவி வனிதா உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
வனிதாவின் மூன்றாவது திருமணம்
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்பவர் தான் நடிகர் விஜய குமார்.
இவரின் திரைபடங்கள் அனைத்தும் ஆரம்ப காலத்திலிருந்து பல ஹீட்களை கொடுத்துள்ளது.
அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் கொரோனா நேரத்தில் பீட்டர் போல் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த வீடியோக்காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
நான்கே மாதத்தில் பிரிவு
இந்த நேரத்தில் பல சர்ச்சைகளை இவர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாலும் சில வாக்குவாதங்கள் காரணமாகவும் இவர்கள் நான்கு மாதத்திலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள்.
இப்படியொரு நிலையில் பீட்டர் போலின் மரண செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மரணத்திற்கு பின்னர் சர்ச்சை நாயகி வனிதா ஏதாவது கூறுவார். கணவரை பார்க்க செல்வார் என எதிர்பார்த்த நிலையில் அவர் அமைதியாக இருந்து வருகிறார்கள்.
பீட்டர் போல் குறித்து பேசிய வனிதா
இதனை தொடர்ந்து தற்போது வனிதா பதிவிட்டுள்ள பதிவு இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில், "என் அம்மா ஒரு விஷயத்தை சொல்வார். நீயே உனக்கு உதவினால் தான் கடவுளும் உனக்கு உதவுவார்.
இந்த பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்."முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரங்களில், எல்லோருமே அவரவர் பாதையை தேர்வு செய்கிறார்கள். நீங்கள் சந்தித்த துயரங்கள் உடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்.
என்னை விட்டு சென்றாலும் மிகுந்த அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இதிலிருந்து வனிதாவின் மனநிலை தற்போது எப்படி இருக்கிறது என அவரின் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.