சர்ச்சை ஏற்படுத்திய வெப்சீரியஸிற்கு... நடிகை சமந்தாவிற்கு கிடைத்த உயரிய விருது! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
இவரை பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையான செய்திகள் இணையத்தில் உலா வந்துகொண்டே தான் இருக்கிறது. அடிக்கடி, இணையத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் சென்ற ஜூன் மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்துள்ளார்.
இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், இந்தப் படத்துக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் 'தி பேமிலி மேன் 2' வெப்தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக நடிகை சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி சமந்தா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.