முன்னாள் காதலரின் டாட்டூவை மாற்ற வனிதா பட்ட கஷ்டம்... என்னவாக மாத்திருக்கார்னு தெரியுமா?
பிக்பாஸ் புகழ் வனிதா பீட்டர் பால் பெயரை டாட்டூ குத்திய நிலையில், அதனை வேறுவிதமாக மாற்றியுள்ள புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கி இருந்தார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக அமையாமல் இருவரும் பிரிந்தனர்.
ஆனால் பீட்டர் பாலின் பெயரை தனது கையில் டாட்டூ குத்திக்கொள்ளும் அளவிற்கு அவர் மீது காதல் வைத்திருந்தார்.
தற்போது அவரைப் பிரிந்துள்ள நிலையில் நடிகை வனிதா, தனது கையில் குத்தி அவரது பெயரை மாற்றியமைத்து டாட்டூ குத்தியுள்ளார். அவர் குதியுள்ள டாட்டூ ஒரு சைனீஸ் சிம்பலாம்.
அதற்கு அர்த்தம் டபுள் ஹேப்பினஸ் என்று தெரிவித்துள்ளதோடு, போகி பண்டிகையில் தனது பழைய கெட்ட விஷயங்கள் கழிந்து புதிய சந்தோசங்கள் தொடரட்டும் என்று கூறி அவரது திருமணத்தின் போது அணிந்திருந்த ஆடையையும் தீயில் போட்டுவிட்டார் வனிதா.
தனது புதிய டாட்டூ குத்திய காணொளியினை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த காட்சியில் வனிதாவின் மகளும் உடன் இருக்க, அவரது மகள் டாட்டூ குத்துவியா என்று கேட்க அதற்கு வனிதா, குத்துவேன்.
ஆனால், தெளிவா இனிமேல் அழிக்காத அளவிற்கு மாற்றாத அளவிற்கு இனி வேற எந்த நாதாரி பெயரும் குத்த மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் உள்ள உறவுகள் மேலும் உறுதியடைய வேண்டும் என்று இந்த டாட்டூவை குத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

