உடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்
நடிகை வனிதா உடல் எடை குறைத்து அட்டகாசமான அழகுடன் வெளியிட்ட புகைப்படத்தினை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
நடிகை வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், தன்னுடைய வேலையினை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரபல ரிவியிலிருந்தும் குறித்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறினார்.
சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடுடன் இருக்கும் வனிதா, அவ்வப்போது கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர். அவர் வெளியிடும் புகைப்படத்தில் பலர் வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் சரமாரியான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
என்னதான் நெகட்டிவ் கமெண்ட் வந்தாலும் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து புகைப்படத்தினை வெளியிட்டு வரும் வனிதா, தற்போதும் அட்டகாசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அழகு மட்டுமின்றி உடல் எடையையும் குறைத்துள்ளார்.