“இப்போ யாரும் நைட்ல கதவை தட்டமாட்டாங்க..” அன்பிற்காக ஏங்கும் வனிதா - மகள் முன் கொடுத்த ஓபன் டாக்!
பிரபல நடிகை வனிதா, “இப்போ யாரும் இரவில் கதவை தட்டமாட்டார்கள்” என உருக்கம் தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் தான் வனிதா விஜயகுமார்.
இதனை தொடர்ந்து பெரியளவு படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 3 திருமணங்கள் செய்து விட்டு சர்ச்சையாக நாயகியாகவே மாறி விட்டார்.
சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், வனிதா அவருடைய மகளுடன் பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
உருக்கமாக பேசிய வனிதா..
அப்போது நடிகர் விஜய், சிவாஜி கணேசன் உள்ளிட்டோருடன் பழகி விதத்தினை புன்னகையுடன் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரின் அம்மாவை பற்றி ஒரு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதில், என்னுடைய அம்மா நைட்ல வந்து கதவை தட்டுவாங்க.. என்னா பண்ற? ” என கேட்பாங்க. நா கடுப்புல கத்துவேன்.
பின்னர் இரவு வேளையில் கோல் செய்து “என்னா பண்றன்னு கேட்பாங்க.. அப்போது நைட்ல என்னா பண்ணுவாங்க தூங்குறே.. என கோல் கட் செய்தேன், ஆனா இப்போ தூக்கமில்லாமல் இருக்கிறேன்.. யாரும் இல்லை என்னை எழுப்ப..” என உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள், “வனிதா உங்கள் அம்மா உங்களுடன் தான் இருக்கார்..” என ஆறுதலாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
Image - Bollywood Life
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |