ரோஸ் மில்க் நிற உடையில் படு பயங்கர லுக்குடன் வனிதா விஜயகுமார்! எப்படி இருக்காங்க தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வனிதா பல சர்ச்சைகளில் சிக்கிவந்தாலும், தனது வேலையினை மிகவும் மகிழ்ச்சியாகவே செய்து வருகின்றார்.
பிக்பாஸில் மிகவும் சாமர்த்தியமாக காய் நகர்த்திய வனிதா, அனைத்து போட்டியாளர்களையும் சரிசமமாக நின்று எந்த சண்டையாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று வந்தார்.
இதனால் மக்களிடையே வெறுப்பினை சந்தித்த வனிதா, மகள்களின் வரவிற்கு பின்பு நல்ல தாயாக அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.
பின்பு திருமணம் என்ற பெயரில் மீண்டும் சர்ச்சையில் சிக்கி, கணவர் பீட்டர் பாலை பிரிந்து தற்போது தனது வேலையினை கவனித்து வருகின்றார்.
ஆனாலும் தனது பாணியில் ரசிகர்களை கவர்வதற்கு அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை, வெளியிட்டு வருகின்றார்.
தற்போது பிங்க் கலர் ஆடையும், பள்ளி சிறுமி போல் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இதனை அவதானித்த நெட்டிசன்கள் ரோஸ் மில்க் உடையில் அழகாக இருப்பதாகவும், சிலரோ இப்போது ஸ்கூல் பொண்ணுனு நினைப்போ என்று கேள்வியினை எழுப்பி வருகின்றனர்.