இளசுகளை கட்டிப்போடும் லுக்கில் வாணி போஜன்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை வாணி போஜனின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
வாணி போஜன்
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமாகிய பின்னர் வெள்ளித்திரை சென்று கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன்.
இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
இதனை தொடர்ந்து வெள்ளத்திரைக்கு காலடி வைத்து, நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரின் யதார்த்தமான நடிப்பு தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களை திரட்டியது.
தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆயிரங்களில் சம்பளம் வாங்கிய வாணி போஜன் தற்போது லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் சினிமா போன்று சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் அடிக்கடி சாரி மற்றும் மார்டன் ஆடைகளில் இருக்கும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
இதன்படி, கடைசியாக பகிர்ந்த புகைப்படங்கள், “ இது வாணி போஜனா?” எனத் திகைக்கும் வகையில் உள்ளது. இப்படி ரசிகர்களின் மனதை நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கும் வாணி போஜனின் சொத்து மதிப்பு ரூ 7 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஊட்டியில் சொந்த வீடு, சென்னையில் புதிய வீடு, 2 சொகுசு கார்கள் என மவுசான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |