மணக்கோலத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் ஸ்ருதி- அவரே போட்ட பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "சிறகடிக்க ஆசை”. இந்த சீரியலில் திருப்பங்களுக்கு பஞ்சமே இருக்காது.
சாதாரண குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விடயங்களை எடுத்துக் காட்டும் விதமாக எடுக்கப்படும் இந்த சீரியலில் முத்துவை விட ரோகிணி மிக முக்கியமான கதாபாத்திரம்.
ஏற்கனவே திருமணமாகி தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதை மறந்து, தனக்கானவொரு வாழ்க்கை வேண்டும் என்பதற்காக மனோஜை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
க்ரிஷை வளர்க்க முடியாமல் ரோகிணியின் அம்மா பல வழிகளில் கெஞ்சி போராடி பார்க்கிறார். ஆனாலும் ரோகிணி மனம் இறங்கி உண்மைகளை அவருடைய வீட்டில் கூறுவது போன்று இல்லை.
திருமண கோலத்தில் ஸ்ருதி
இந்த நிலையில், இவ்வளவு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோகிணியின் நண்பியாக வருபவர் தான் வித்யா என்கிற ஸ்ருதி நாராயணன்.
இவர், ரோகிணியின் தோழியாக இருந்து அவர் செய்யும் மோசமான வேலைகளுக்கு உதவிச் செய்து கொண்டிருக்கிறார். கடந்த எபிசோட்களில் முருகன் என்பவரை வித்யா காதலித்து திருமணம் செய்துக் கொள்வது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டன.
அதில் மணப்பெண் கோலத்தில் படுமாஸாக என்றிக் கொடுத்த ஸ்ருதி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, “ஒரு வழியாக திருமணம் முடிந்து விட்டது..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வித்யா - முருகன் திருமணத்தில் ரோஹிணியின் ஆட்டத்தை முத்து - மீனா கண்டுபிடிப்பார்களா? அல்லது வழக்கம் போன்று ரோஹிணி கபடநாடகம் போட்டு தப்பித்துவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |