50,000 ரூபாயின் மதிப்பு 20 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவாக இருக்கும்? அதிர்ச்சியளிக்கும் கணிப்பு!
தற்போது நாம் வைத்திருக்கும் 50,000 ரூபாயின் மதிப்பு 20 ஆண்டுகளுக்கு பின்னர் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து சிந்தித்திருக்கின்றீர்களா? இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 100 ரூபாயின் மதிப்பு தற்போது எவ்வளவு குறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
பணவீக்கம் (Inflation) அதிகரித்து வருவதால் காலப்போக்கில் பல்வேறு பொருட்களின் விலையை அதிகரித்து விடுகிறது.இதனால், பணத்தின் மதிப்பும் குறைந்துவிடுகிறது.
இதனை எல்லாம் நாம் சமாளிக்க வேண்டும் என்றால் இப்போது இருந்தே அதற்கான திட்டமிடுதலை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
இன்று 100 ரூபாயில் வாங்கக்கூடிய அனைத்தும் எதிர்காலத்தில் வாங்க முடியாமா என்று கேட்டால் சந்தேகம் தான். இந்த மாதிரியான நேரங்களில் நாம் முதலீடுகள் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது சிறந்த தீர்வாக இருக்கும்.
அதாவது, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடியவற்றில் முதலீடு செய்யவது சிறப்பு.
50,000 ரூபாயின் மதிப்பு எவ்வளவாக இருக்கும்?
பணத்தின் வாங்கும் சக்தி காலப்போக்கில் குறைவடைகின்றது. இதுவே பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது. எளிமையாகச் சொன்னால், எதிர்காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துக்கொண்டே போகும் ஆனால் மேலும் பணத்தின் மதிப்பு குறைவடையும்.
இந்தியாவில் தற்போது பணவீக்கம் (Inflation) 5.09 % ஆக உள்ளது. அதன்படி, 20 ஆண்டுகளுக்கு பிறகு 50,000 ரூபாயின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிடலாம்.
பணவீக்கக் கணக்கீட்டின்படி பார்த்தல் இன்று 50 ஆயிரம் ரூபாயில் எதை வாங்கினாலும் அந்த பொருளை 20 ஆண்டுகளுக்குப் பிறகு வாங்குவதற்கு ரூ.1,57,358 செலவாகும்.
அதாவது ரூ.1,07,358 அதிகரிக்கும். இரண்டு மடங்குக்கு மேல் பணம் செலவழிக்க வேண்டியதாக இருக்கும். இதனால் தான் எதிர்காலத்தில் தேவைப்படும் நிதிகளை சமாளிக்க கூடியவற்றில் முதலீடுகள் செய்யப்படுகின்றன.
பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது போல, கடந்த சில ஆண்டுகளில், இத்தகைய முதலீடுகளின் வருமானம் பணவீக்க விகிதத்தை விட அதிகமாக இருப்பதால் இந்த முதலீடுகளில் ஆபத்துகள் அதிகம். அதனால்தான் முதலீடு செய்யும் முன்பு நிதி நிபுணர்கள் ஆலோசனை பெற்று திட்டமிட வேண்டும் என்று கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |