வைரமுத்து மகன் மீதும் குற்றச்சாட்டு எழுப்பிய சின்மயி- மதன் கார்க்கியின் அதிரடி பதில்!
கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து மீடூ புகார் தெரிவித்து வரும் பாடகி சின்மயி, சமீபத்தில் அவருக்கு கேரளாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால், வைரமுத்து விருதை திருப்பி அளிப்பதாகவும் முதல்வரி கொரோனா நிவாரண நிதிக்கும் நிதியளித்தார். அதன்பின் கடுமையான விமர்சனத்திற்கும் பதிலளித்தார்.
இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் சின்மயியிடம், ஏன் வைரமுத்துவை உங்கள் திருமணத்திற்கு அழைத்தீர்கள், ஏன் அவரது காலில் விழுந்தீர்கள் என புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சின்மயி, கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணுனதே அவர் மகன் தான் என பதிலளித்தார். இதனால், சின்மயி அளித்த பதில் குறித்து வைரமுத்துவின் மகனிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மதன் கார்க்கி கூறியதாவது: “இது மேலும் ஒரு பொய். அவர் என் தந்தையை தன் திருமணத்திற்கு அழைக்க விரும்பினார். ஆனால் என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால், அபாயின்ட்மென்ட் கொடுக்க மறுத்துவிட்டார்.
அதனால் அவரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார். நானும் வாங்கிக் கொடுத்தேன். அவரின் வீட்டிற்கு சின்மயி தனியாக சென்று, அவரது பாதங்களை தொட்டு ஆசி வாங்கி, திருமணத்திற்கு வரவேற்றதாக” மதன் கார்க்கி கூறினார்.