குழந்தைகளின் பிறப்புறுப்பில் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? அனைத்து பெற்றோர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்
பிறந்த குழந்தை பராமரிப்பு என்பது அம்மாக்களுக்கு கடினமான ஆனால் மகிழ்ச்சியான சவால் தான். குழந்தையை நோய் நொடி அண்டாமல் வைத்திருக்க குழந்தையை பார்த்து கொள்வது அவசியம். ஆனால் ஆண் குழந்தையை காட்டிலும் பெண்குழந்தைகளைத்தான் கூடுதலாக பராமரிக்க வேண்டியிருக்கிறது.
பெண் குழந்தைகள் பிறந்த முதலே யோனி பகுதி சுத்தம் செய்வது ஒரே திசையில் தான் இருக்க வேண்டும். மெல்லிய துணி கொண்டு சுத்தம் செய்யும் போதும் , வளர்ந்த பிறகும் கூட முன்பக்கம் இருந்து பின்பக்கம் நோக்கி தான் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது. அல்லது பின்புறத்தை சுத்தம் செய்துவிட்டு பிறகு முன்புறம் சுத்தம் செய்ய வேண்டும்.
மலப்பகுதி வாயில் இருக்கும் கிருமிகளால் பிறப்புறுப்பில் நோய்த்தொற்று எளிதாக ஏற்படும். மேலும் குழந்தைகளின் பிறப்புறுப்பில் துர்நாற்றம் எதனால் தோன்றுகின்றது அதனை எவ்வாறு செய்து சரிசெய்யலாம் மேலும் வாயில் ஏற்படும் துர்நாற்றம் எதனால் ஏற்படுகின்றது என்பதைக் காணொளியில் தெளிவாக காணலாம்.