டப்பிங் பணியின் போது சந்திரமுகியை கிளப்பி விட்ட சக ஊழியர்கள்.. பயத்தில் நடுங்கிய வடிவேலு!
செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள சந்திரமுகி 2 படத்திற்கு நடிகர் வடிவேலு டப்பிங் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் பார்க்கப்பட்ட படங்களில் சந்திரமுகியும் ஒன்று.
இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் ரஜனிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு என முன்னணி நடிகர்கள் இணைந்து மிரட்டியிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து சந்திரமுகியில் இரண்டாவது பாகம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
டப்பிங் பணியின் போது மிரட்டிய சந்திரமுகி
இந்த நிலையில் தற்போது திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது.
இதன்படி, நடிகர் வடிவேலு திரைப்படத்திற்கான வசனத்தை பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் சந்திரமுகி வசனத்தை பணியாளர்கள் பின்னால் போட்டு விடுகிறார்.
இதனால் திடுக்கென பயந்த நடிகர் வடிவேலு ஒரு நிமிடம் வியர்வை தொட்ட பதிலளித்துள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ எங்கு சென்றாலும் வடிவேல் போல் வராது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |