பட்டு புடவையில் குஸ்திக்கு தயாரான பிரபலங்கள்.. வாயடைத்து போன கோபிநாத்
பட்டு புடவையில் குஸ்திக்கு தயாரான பிரபலங்களை பார்த்து கோபிநாத் வாயடைத்து போயுள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
குஸ்திக்கு தயாரான பிரபலங்கள்
இந்த நிலையில் உழவர் தின சிறப்பு நிகழ்ச்சியாக தமிழர்களின் கலைகளில் தேர்ச்சியானவர்களும், இன்னொரு பக்கம் சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பிரபலங்களுக்கு கலையை கற்றுக் கொடுத்துள்ளனர்.
இதன்போது இரண்டு பெண்கள் பட்டு புடவை கட்டிக் கொண்டு குஸ்தி போட்டிக்கு தயாராகி உள்ளனர்.
இவர்களின் இந்த முயற்சியை கண்டு கோபிநாத் வாயடைத்து போயுள்ளார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |