கர்ப்பிணி பெண்கள் முட்டையை பச்சையாக குடிக்கலாமா?
புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவு முட்டை, முட்டையை பொரியல், வறுவல், கிரேவி, குழம்பு இப்படி ஏகப்பட்ட வகைகளில் சமைத்து சாப்பிடலாம்.
சமைத்து சாப்பிடுவதை விட சில நேரங்களில் பச்சையாக முட்டையை சாப்பிட சொல்வார்கள்.
பூப்படைந்த பெண்கள் பச்சையாக 16 நாட்கள் முட்டைகளை குடித்து வர வேண்டும் என முன்னோர்கள் வலியுறுத்துவார்கள்.
அந்த வகையில் ஏன் முட்டையை பச்சையாக குடிக்க வேண்டும்? அப்படி முட்டையில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள்
- புரோட்டீன் - 6.3 கிராம்
- வெள்ளைக்கருவில் உள்ள புரோட்டீன்- 3.5 கிராம்
- மஞ்சள் கரு - 2.8 கிராம்
அத்துடன் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.
மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி12, ஏ, இ, கே, பி6 போன்ற சத்துகளும் இருக்கின்றன.
முட்டையை ஏன் பச்சையாக குடிக்க வேண்டும்?
1. முட்டையில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதனால் பெண்கள், இளம்பெண்கள், தடகள வீரர்கள், உடலுக்கு வலு தரும் உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் கட்டாயம் முட்டையை குடிப்பார்கள்.
2. சமைத்த முட்டையை விட பச்சையாக இருக்கும் முட்டையில் அதிகமான புரோட்டின் இருக்கின்றன.
3. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றோர் பச்சையாக முட்டையை குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
4. முட்டையை 74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைத்து சாப்பிடும் போழுது சால்மோனெல்லா பாக்டீரியா அழிந்து விடுகிறது.
முக்கிய குறிப்பு
பச்சையாக குடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அதனால் தீமைகளும் இருக்கின்றன. ஆகையால் முழுமையாக ஆராய்ந்த பின்னர் எடுத்து கொள்வது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |