மின் கம்பத்தில் மனைவியை கட்டி வைத்து அடித்த கணவன் - வைரலாகும் பகீர் வீடியோ!
நபர் ஒருவர் மனைவியை மின் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள அர்செனா கிராமத்தில் நபர் ஒருவர் ஒரு பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து கம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர்கள் வீடியோவாக எடுத்து, இணைய தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இணையத்தில் தீயாய் பரவிய இந்த வன்கொடுமை வீடியோவை சமூக வளைதங்களில் பொது மக்கள் கண்டனங்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
பின்னர், போலீஸார் வீடியோவை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் பெயர் ஷியாம்பிஹாரி என்றும், அடி வாங்கிய பெண் பெயர் குசுமா தேவி என்றும் அடையாளம் காணப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில், இந்த சம்பவம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அர்சேனா கிராமத்தில் ஜூலை 14 அன்று நடந்தது. வீடியோவில் உள்ள நபர், பாதிக்கப்பட்ட குசுமா தேவியின் கணவர் ஷியம்பிஹாரி என அடையாளம் காணப்பட்டார்.
மேலும், ஷியாம்பிஹாரி மற்றும் அவரது தாயார் பர்ஃபா தேவி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 342 (தவறான காயப்படுத்தும் அத்துமீறல்) மற்றும் 354 (ஒரு பெண்ணின் மரியாதையை சீர்குலைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
#WATCH उत्तर प्रदेश: आगरा में एक पति ने अपनी पत्नी को खंबे से बांधकर डंडे से पीटा। घटना का वीडियो वायरल हुआ। (20.07) pic.twitter.com/ND9CbIo9dP
— ANI_HindiNews (@AHindinews) July 20, 2022