உறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்களே அலட்சியம் வேண்டாம்

Cancer Cervical Cancer
By Manchu May 26, 2022 08:30 PM GMT
Report

கருப்பை புற்றுநோய். உலகளவில் பல பெண்களின் உயிரைகுடித்த மோசமான புற்றுநோய். ஆரம்ப கட்டத்தில் இதை கண்டறிந்தால் மோசமான விளைவுகள் உண்டாகாமல் பார்த்துகொள்ளலாம்.

புற்றுநோய் என்றால் என்ன?

உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கிறோம். இந்த நோய்பற்றி அறிந்துகொள்வதற்குமுன் இயல்பாக உள்ள உயிரணுக்கள் எவ்வாறு புற்றுநோய் அணுக்களாக மாறுகிறது என்று பார்ப்போம்!

நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன.

இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன.

பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன.

குரங்கம்மை எப்படி பரவுகின்றது? அதன் அறிகுறிகள் என்ன? கட்டாயம் தெரிஞ்சிகோங்க 

உறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்களே அலட்சியம் வேண்டாம் | Uterus Cancer Symptoms In Tamil

எல்லாக் கட்டிகளுமே கேன்சர் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை; அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதில்லை.

சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்கின்றன. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிக்கின்றன.

ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதனால், உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகிறது.

புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய்! விரிவான விளக்கங்களுடன் 

உறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்களே அலட்சியம் வேண்டாம் | Uterus Cancer Symptoms In Tamil

புற்றுநோய்க்கு காரணம் என்ன?

அடிப்படையாக உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது.

புகையிலை உபயோகித்தல், உணவுமுறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை, வாழ்க்கைமுறை ஆகியவை இம்மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இத்தகைய மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வரலாம்.

சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. உதாரணமாக எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்றவை.

நெருங்கிய உறவினர்களுக்குப் புற்றுநோய் இருந்தால் மருத்துவரிடம் விபரம் தெரிவித்து புற்றுநோய் உங்களுக்கு வரும் வாய்ப்பு குறித்து கலந்தாலோசிக்கவும்.

கடுமையான ஆபத்தினை ஏற்படுத்தும் காளான்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? 

உறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்களே அலட்சியம் வேண்டாம் | Uterus Cancer Symptoms In Tamil

கர்ப்பப்பை புற்றுநோய்

உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதில் பெரும்பாலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத பெண்கள் தான் அதிகம் என்று சொல்லலாம்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான முக்கியமான காரணமாக சொல்லகூடியது ஹியூமன் பாபிலோமாவைரஸ் தான். இது உடலுறவு மூலம் பரவுகிறது. வைரஸ்களில் 150க்கும் மெற்பட்டவை இருந்தாலும் இரண்டு வைரஸ்களால தான் 70% புற்றுநோய் ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனமும்.

இது தவிர அதிக முறை கருக்கலைப்பு செய்து கொள்வது, மாதவிடாய் கால சுகாதாரமின்மை, கருப்பை வாய் கிருமித்தொற்றூ போன்றவற்றாலும் உண்டாகிறது. பெரும்பாலும் 50 வயதுக்கு பிந்தைய பெண்கள் தான் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

எனினும் எந்த வயதிலும் இந்நோய் தாக்கலாம் என்பதால் அசாதாரணமாக இருக்க கூடாது. இந்நோய்கான அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாப்பிட்டால் இந்த பிரச்சினையை ஏற்படுத்துமாம்! 

உறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்களே அலட்சியம் வேண்டாம் | Uterus Cancer Symptoms In Tamil

பெரும்பாலான வகையான புற்றுநோய்கள்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பெண்களிடையே அமைதியான கொலையாளி என்று குறிப்பிடப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. எல்லாவற்றிலும் மிக முக்கியமானது, ஏனெனில் இந்த நிலை மேம்பட்ட நிலையை அடையும் வரை எந்த அறிகுறிகளையும் காட்டாது. மற்றொரு உண்மை என்னவென்றால், இந்த நோய் மெதுவாக முன்னேறுகிறது.

​அசாதாரணமான ரத்தபோக்கு

மாதவிடாய் காலங்கள் 3 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். எனினும் இறுதி நாட்களில் உதிரபோக்கு குறையக்கூடும்.

ஆனால் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலங்களில் அதிகமான உதிரபோக்கு கட்டியாக உதிரம் வெளியேறுதல் தொடர்ந்தால் அது அசாதாரணமானது.

அதிலும் தொடர்ந்து நீண்ட நாட்கள் மாதவிடாய் காலம் அதிக உதிரபோக்கோடு இருந்தாலும் அசாதாரணமானதுதான்.

இளவயது பெண்களுக்கு வரக்கூடிய இந்த பிரச்சனைக்கௌ காரணம் பிசிஓஎஸ் போன்ற அறிகுறிகளாக இருக்கலாம்.

ஆனால் நடுத்தர வயது அதற்கு பிந்தைய பெண்கள் அதிகமான உதிரபோக்கை நீண்ட நாட்களாக தொடர்ந்து அனுபவித்தால் அது கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலை குணமாக்கும் எளிய மருத்துவ குறிப்புகள் 

உறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்களே அலட்சியம் வேண்டாம் | Uterus Cancer Symptoms In Tamil

​மாதவிடாய்க்கு பிந்தைய உதிரபோக்கு

மாதவிடாய் காலத்தில் உதிரபோக்கு என்பது ஒரு அறிகுறி என்றால் மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகு அப்பாடா என்று பெண்கள் மனதளவில் ஓய்வெடுக்கும் நேரத்தில் வரகூடிய உதிரபோக்கு அசாதாரணமானது.

அதிலும் மாதவிடாய் முழுமையாக நின்ற பிறகு சில துளி உதிரம் வந்தாலும் அது மிக அசாதாரணமானதுதான்.

இது இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிறத்தில் வெளிப்படும் போது மோசமான அறிகுறி என்பதை உணர்ந்து மருத்துவரை அணுகுவது நல்லது.

​உறவின் போது வலி

பெண்கள் மெனோபாஸை எட்டும் காலத்தில் இயற்கையாகவே உடலுறவில் நாட்டம் இல்லாதது மட்டுமின்றி, பெண் உறுப்பும் வறட்சியாக இருக்கும் இக்காலத்தில் கருப்பை வாய் தொற்று ஏதேனும் இருந்தால் அது மேலும் மோசமான உடல் உபாதை மன அழுத்தத்தை உண்டாக்கும். உடலுறவின் போது கடுமையான வலி உண்டாக கூடும்.

உடலுறவுக்கு பின்பு உதிரப்போக்கு வெளிப்படலாம். கர்ப்பபையில் கட்டி. அல்லது கருப்பை வாயில் தொற்று இருந்தாலும் கூட உடலுறவுக்கு பின்பு உதிரப்போக்கு இருக்கலாம்.

இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க! இந்த பிரச்சினைகள் உங்களை தேடி வருமாம் 

உறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்களே அலட்சியம் வேண்டாம் | Uterus Cancer Symptoms In Tamil

வெள்ளைப்படுதல்

பெண்களுக்கு வெள்ளைப்படுதலும் உதிரபோக்கும் இயல்பானது தான். பெண். ஆனால் அசாதாரணமான நாற்றத்துடன் வெள்ளைப்படுதல், அது பச்சை நிறத்தில் இருப்பது, அதிக அரிப்பை சந்திப்பது போன்றவை எல்லாமே கருப்பை தொற்றுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

வெள்ளைப்படுதல் அதிகமானால் கருப்பை தொற்று அல்ல. ஆனால் இதை அலட்சியம் செய்தால் அந்த தொற்று பெரிதாகி நாளடைவில் செல்களை பாதித்து புற்றுநோய் உருவாவதற்கு காரணமாகலாம். அதனால் வெள்ளைப்படுதல் அதிகமாகும் போது அலட்சியம் வேண்டாம்.

உறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்களே அலட்சியம் வேண்டாம் | Uterus Cancer Symptoms In Tamil

​பெண் உறுப்பில் எரிச்சல்

சிறுநீர் தொற்று வரும் போது யோனி பகுதியில் எரிச்சல் வருவது உண்டு. ஆனால் சிறுநீர் கழிக்காமல் இருக்கும் போதும் யோனி உறுப்பில் அரிப்பும் எரிச்சலும் இருந்தால் அதிலும் தொடர்ந்து நாள் கணக்கில் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.

இது சாதாரண கிருமித்தொற்றாக இருந்தால் நான்கு நாட்களில் சரியாகிவிடக்கூடும். கருப்பை வாய் புற்றூநோய் தொற்றாக இருந்தால் அரிப்பும் எரிச்சலும் அதிகமாகவும் தொடர்ந்தும் இருக்கும்.

முடி கொட்டுவதை அடியோடு நீக்கனுமா? அப்போ பூண்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்! 

உறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்களே அலட்சியம் வேண்டாம் | Uterus Cancer Symptoms In Tamil

சிறுநீர் கழித்தல்

பல பெண்களும் சிறுநீர்த்தொற்று பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். இதனால் சிறுநீர் அவசரமாக வெளியேறினால் அதற்கு காரணம் சிறுநீர் தொற்று தான் என்று ஒன்றை மட்டுமெ நினைக்கிறார்கள்.

ஆனால் அதிகமாக திரவ உணவுகள் எடுத்துகொள்ளாத நிலையிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீர் வேகமாக வருவது எல்லாமே தொடர்ந்து இருந்தால் அது கருப்பை வாய் புற்றுநோய் அருகில் இருக்கும் இடங்களிலும் பரவி இருக்கலாம் என்பதால் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் நடக்கும் ஆச்சரிய நன்மைகள் 

உறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்களே அலட்சியம் வேண்டாம் | Uterus Cancer Symptoms In Tamil

​தீவிரமான அறிகுறிகள்

கருப்பை வாய் சிறுநீரகம், மலக்குடல், யோனி மூன்றின் அருகே உள்ளது. இதனால் கருப்பை புற்றுநோய் பாதிப்பு அறிகுறிகளை கவனிக்காமல் விட்டால் சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம், முதுகு வலி, கால்களில் வீக்கம், வயிற்றுப்போக்கு, மலக்குடல் வலி, அதிக சோர்வு, எடை இழப்பு, பசியின்ம, குமட்டல் வாந்தி போன்ற அறிகுறிகள் அதிகரிக்கலாம்.

மேற்கண்ட அறிகுறிகளில் ஒன்றை தொடர்ந்து கண்டாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. அதே நேரம் இந்த அறிகுறிகள் இருந்தாலே அது புற்றுநோயாகத்தான் இருக்கும் என்று நினைக்காமல் மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

இதை தாண்டி ஆரோக்கியமாகவே இருந்தாலும் வருடம் ஒரு முறை பேப்ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்வது இன்னும் பாதுகாப்பானது.

உறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்களே அலட்சியம் வேண்டாம் | Uterus Cancer Symptoms In Tamil

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US