சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய்! விரிவான விளக்கங்களுடன்
சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது அவர்களது கண்களில் உள்ள விழித்திரை பாதிக்கப்படுவதுடன் அதில் உள்ள இரத்த நாளங்கள் பலவீனமாகும். ஆரம்பத்தில், எவ்வித அறிகுறியும் இருக்காது. முறையான சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் நாளடைவில் பார்வையிழப்பு உண்டாகும்.
ஆரம்ப நிலைகளில் இந்த நோயைக் குணப்படுத்த முடியும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், கண் மருத்துவரை வருடத்திற்கு ஒருமுறை சந்தித்து கண்களைப் பரிசோதனை செய்து கொள்ளவும்.
சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பால் பார்வையிழப்பு உண்டாக இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
Diabetic Macular Edema: விழித்திரையின் இரத்த நாளங்கள் பலவீனமாக இருக்கும்போது, திரவம் வடியத் தொடங்கும். இந்த திரவம், விழித்திரையில் படிந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, பார்வையிழப்பு ஏற்படும்.
Proliferative Diabetic Retinopathy: விழித்திரையில் புதிய இரத்த நாளங்கள் வளரும். இவை, பலவீனமாக இருப்பதுடன் விரைவில் உடைந்தும் விடும். இதனால் திரவம் வடியத் தொடங்கி, திடீரென பார்வையிழப்பு உண்டாகும்.
அபாயக் காரணிகள்
Type 1 அல்லது Type 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நோயாளிகள்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
கொழுப்பு உள்ளவர்கள்
கர்ப்பிணிகள்
ஆகியோருக்கு சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை இயல்பான நிலையில் இருக்கும் சிலருக்கும் இந்த நோய் ஏற்படலாம். எனவே, அனைத்து சர்க்கரை நோயாளிகளும் வருடத்திற்கு ஒருமுறை கண்களைப் பரிசோதிக்க வேண்டும்.
தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் நடக்கும் ஆச்சரிய நன்மைகள்
நினைவில் கொள்ள வேண்டியவை
சர்க்கரை நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு கண்கள் பாதிப்படையும் அபாயம் இருமடங்கு அதிகம்.
சர்க்கரை நோயாளிகள், வருடத்திற்கு ஒருமுறை கண்களைக் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம்.
அறிகுறிகள்
ஆரம்ப நிலையில் எவ்வித அறிகுறியும் இருக்காது. சர்க்கரை நோயாளிகள், கண்களைப் பரிசோதிக்கும்போதுதான் கண்டறிய முடியும்.
அடுத்தடுத்த நிலைகளில் பின்வருபவற்றை உணர முடியும்:
படிப்படியான பார்வையிழப்பு
திடீர் பார்வையிழப்பு
மங்கலான பார்வை
கண் வலி அல்லது கண் சிவப்பாக இருத்தல்
இந்த அறிகுறிகள் தோன்றினால் பொதுவான கண் குறைபாடாகக் கூட இருக்கலாம். விழித்திரை பாதிக்கப்படாமலும் இருக்கலாம். கண் மருத்துவரை உடனடியாகச் சந்திக்கவும். முறையான இடைவேளைகளில் கண்களைப் பரிசோதித்துக் கொள்வதால் பார்வையைப் பாதுகாக்க முடியும்.
முறையான இடைவேளைகளில் நீங்கள் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்பவராக இருந்தாலும் உங்கள் பார்வையில் ஏதேனும் வித்தியாசத்தை உணர்ந்தால் அடுத்த சந்திப்பு நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக கண் மருத்துவரிடம் செல்லவும்.
ABC ஜூஸ் ஏன் தினமும் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
சிகிச்சை
மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.
அவை
விட்ரிக்டமி அறுவை சிகிச்சை
லேசர் சிகிச்சை
விழித்திரையில் செலுத்தப்படும் ஊசி.
விட்ரிக்டமி அறுவை சிகிச்சை
விழித்திரை நோய்களை குணப்படுத்த, விட்ரிக்டமி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கண்ணின் பின்புறத்தில் விடரஸ் (vitreous) எனும் ஜெல்லி போன்ற திரவம் இருக்கும். காற்று, பலூனுக்கு வடிவம் தருவது போல இந்த விடரஸ், கருவிழிக்கு வடிவம் தரும். ஆனால் சில நோய்களுக்கு இது மேகமூட்டம் போலவோ விழித்திரையை இழுப்பது போலவோ இருக்கும். இதுபோன்ற நிலைகளில் விடரஸ் மாற்றப்பட வேண்டும். விட்ரிக்டமி என்பது இந்த திரவத்தை அகற்றவோ மாற்றவோ பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை.
லேசர் சிகிச்சை (Photocoagulation)
லேசர் சிகிச்சையின்போது, கசிவை ஏற்படுத்தும் இரத்த நாளங்களை அடைக்க லேசர் பயன்படுத்தப்படும். பின்வரும் விழித்திரை நோய்களுக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்படும்.
இரவு தூங்கும் முன்பு இத ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்க... எடை கடகடனு குறையும் அதிசயம் நடக்கும்!
விழித்திரை ஊசி (Intravitreal Injections)
விழித்திரை ஊசி எனப்படுவது கண்களுக்குள் செலுத்தப்படும் ஊசி. வீக்கத்தைக் குறைப்பதற்காகவும் சிறிய இரத்த நாளங்கள் புதிதாக உருவாகுவதையும் தடுக்கும்.
மேலதிக தகவல்களுக்கு- விழித்திரை நோயும், சிகிச்சை முறைகளும்