அரிசி வடித்த தண்ணீரை இனிமேல் வீசாதீங்க! இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா?
அரிசி ஊற வைத்த நீரை அதிகமானோர் கீழே தான் கொட்டுகிறார்கள். இதில் பல அற்புதமான நன்மைகள் பற்றி யாருக்கும் தெரியாமல் தான் இப்படி செய்கிறார்கள்.
அரிசித் தண்ணீரில் பி12 இருக்கிறது. இது உடலுக்கு தேவைப்பட்ட சக்தி ஒன்றாகும்.
இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி அக்சிடண்டுகள், தாதுக்கள், விட்டமின் பி மற்றும் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.
அரிசியை நன்கு கழுவி பின்னர் ஊறவைத்து எடுக்கும் தண்ணீர் நமது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அரிசித்தண்ணீர்
முகத்திற்காக டோனர்: அரிசிதண்ணீரில் முகத்தை சுத்தப்படுத்தும் டோனர் செய்யலாம். இது முகத்தில் உள்ள துளைகள் மூடுவதற்கும், முகம் வீங்கியது போல இருப்பதையும் குறைக்கும்.
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துகள், முகப்பொலிவை கூட்டி, சருமத்தை பளபளப்பாக்க உதவும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கூந்தலுக்கு பயன்படுத்தலாம்: இந்த அரிசித்தண்ணீரில் ஹேர்கேர் ரொட்டீனில் சேர்த்து தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். பின்னர் வெறும் அரிசித்தண்ணீரை ஊற்றி கூந்தலை அலச வேண்டும்.
இப்படி செய்தால் இது, உங்கள் கூந்தலை பளபளப்பாக மாற்றுவதோடு, மென்மையாகவும் மாற்றுகிறது.
இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினர்ல் சத்துக்களால், முடி உடைதல் மற்றும் காய்ந்து போகுதல் ஆகியவை தவிர்க்கப்படும்.
காய்கறிகள்: காய்கறிகள் நமது உடலுக்கு பல ந்னமைகளை தருகிறது. இதை வேக வைக்க தண்ணீரை ஊற்றுவதற்கு பதிலாக அரிசி நீரை ஊற்றி வேக வைக்கலாம். இது, உங்கள் காய்கறிகளுக்கு பிரத்யேகமான சுவையை அளிப்பதோடு, நல்ல ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |