PhonePe, GPay மூலம் பணபரிமாற்றம் செய்றீங்களா? ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிமுறைகளாம்
யூபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சர்வர் பிரச்சனைகளை தவிர்க்க NPCI (தேசிய கொடுப்பணவு கழகம்) புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
PhonePe, GPay புதிய விதிகள் என்ன?
பேலன்ஸ் பார்ப்பது – நாள் ஒன்றுக்கு 50 முறை மட்டுமே முன்னர் பேலன்ஸ் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பது சாத்தியமாக இருந்தது. ஆனால் இப்போது ஒரு நாளில் அதிகபட்சம் 50 முறை மட்டுமே பேலன்ஸ் பார்க்க முடியும்.
வங்கி தொடர்பான தகவல் – அதிகபட்சம் 25 முறை மட்டுமே வங்கியுடன் தொடர்புடைய தகவல்கள் (உதா: பாஸ் புக் விவரம், வங்கி சரிபார்ப்பு) பெறும் வசதி ஒரு நாளில் 25 முறை மட்டுமே இருக்கும்.
Pending உள்ள பரிமாற்ற நிலை – 3 முறை மட்டுமே பார்க்க முடியும் ஒரு பரிமாற்றம் நிலுவையில் இருந்தால் அதன் நிலையை அதிகபட்சம் 3 முறை மட்டுமே பார்க்க முடியும். மேலும், ஒவ்வொரு முயற்சிக்கும் 90 விநாடிகள் இடைவெளி இருக்க வேண்டும்.
Auto Debit (ஆட்டோ பேமென்ட்) நேரக் கட்டுப்பாடு Netflix, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற சேவைகளுக்கு ஆட்டோ டெபிட் செய்வதில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த பரிமாற்றம் நடைபெறும் நேரங்களில் மட்டுமே இந்த வசதி செயல்படும்.
காலை 10 மணிக்கு முன்பு
மதியம் 1 மணி முதல் 5 மணி வரை
இரவு 9.30 மணிக்குப் பிறகு
ஏன் இந்த மாற்றங்கள்?
பயனாளர்களிடமிருந்து அதிகப்படியான வேண்டுகோள்கள் வருவதால் யூபிஐ சர்வர் மெதுவாக செயல்படும் நிலை ஏற்பட்டது. இதை தவிர்த்து வேகமான, தடையற்ற பணப்பரிமாற்றத்தை உறுதிசெய்ய NPCI இந்த புதிய விதிகளை அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்களின் மூலம் யூபிஐ பயன்படுத்தும் அனைவருக்கும் சிறந்த மற்றும் விரைவான சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
