ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?.. பலரும் அறியாத உண்மை
ஹெல்மெட் அணிவதால் தலைமுடி கொட்டுவது அதிகமாகுமா என்ற கேள்விக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பயணத்தில் ஹெல்மெட்
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஹெல்மெட் அணிந்து தான் வாகனத்தை இயக்க வேண்டும். இருசக்கர வாகனத்தை ஹெல்மெட் இல்லாமல் எடுத்து பயணித்தால் அபராதம் ஏற்படும்.
ஆனால் ஹெல்மெட் உயிர் காக்கும் கவசமாக நமக்கு காணப்பட்டாலும், பலருக்கும் அசௌகரியமான ஒன்றாகவே உள்ளது.
ஏனெனில் ஹெல்மெட்டை இறுக்கமாக அணியும் போது தலையில் வியர்வை தங்கி அதன் காரணமாக முடி கொட்டும் என பலரும் நம்பி வருகின்றனர்.

முடி உதிர்தல் உண்மையா?
ஹெல்மெட்டில் படியும் தூசி, அழுக்கு காரணமாக முடிகளின் வேர்கள் பாதிக்கப்பட்டு முடி உதிர்வதாக நம்புகின்றனர்.
ஆனால் அறிவியல் ரீதியாக இதற்கு ஆதரமில்லை என்று கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதே நேரம் ஹெல்மெட் அணிவதால் தலையில் உராய்வு ஏற்படலாம்.
இதன் காரணமாக வியர்வை தங்கவும், அது முடியின் வேர்களுக்கு அருகில் உள்ள தோல்களுக்கு சிறிது பாதிப்பு ஏற்பட்டக்கூடும்.

Image: shutterstock
ஹெல்மெட்டை பூச்சை தொற்று இல்லாமல் சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். அவ்வாறு இருந்தால் தலைமுடி கட்டாயம் பாதிக்கப்படும்.
ஹெல்மெட்டின் உட்பகுதி கட்டாயம் சுத்தம் செய்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி உதிர்வு பிரச்சனையை தடுக்க முடியும்.

மேலும் தலைமுடியை எப்பொழுதும் அழுக்கு இல்லாமல் சுத்தமாக வைப்பது முடி உதிர்வு ஏற்படாமல் இருக்கும்.
உடலில் ஹார்மோன் மாற்றங்கள், மரபியல் காரணம், வாழ்க்கை முறை இவற்றினால் முடி கொட்டுவதற்கு அதிகமாக வாய்ப்புள்ளதாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |