இரவில் ஷாம்பு போட்டு குளிச்சு பாருங்க.. பலன்களால் அசந்து போவீங்க
பெண்களின் அழகில் கூந்தல் பெரும் பங்கு வகிக்கிறது.
நமது ஆளுமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நமது தோற்றத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தல் இருப்பவர் தன்னை அழகாக வெளியில் காட்டிக் கொள்வார். அவர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
கூந்தல் பராமரிப்பு செய்ய நினைப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் தலைக்கு குளித்து விடுவார்கள். இது அவர்கள் அன்றைய நாளை உற்சாகமாக வைத்து கொள்ள உதவியாக இருக்கிறது.
இன்னும் சிலர் இரவு நேரம் அவர்களின் வேலைகளை முடித்து விட்டு குளிப்பார்கள். இது தலைமுடி ஆரோக்கியத்தையும் உச்சந்தலையை ஆழமாக சுத்தம் செய்யவும் உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
அந்த வகையில் இரவில் ஷாம்பு போட்டு குளித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
இரவில் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்
1. இரவு வேளைகளில் குளிப்பதால் உச்சந்தலை சுத்தமாக இருக்கும். சரும செல்கள் மற்றும் முடி செல்கள் தலை சுத்தமாக இருப்பதால் சுறுசுறுப்பாக இயங்கும்.
2. பகலில் தூசி, வியர்வை மற்றும் எண்ணெய் முடியில் குவிந்து இருக்கும். இனால் பொடுகு பிரச்சினை அதிகரிக்கும். இரவில் குளித்து விட்டால் பொடுகு பிரச்சினை வருவது குறைவாக இருக்கும். அரிப்பும் இருக்காது. நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
3. இரவில் ஷாம்பு செய்த பிறகு சீரம் அல்லது முடி எண்ணெய் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும். இரவில் குளித்து விட்டால் வலுவாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும் கூந்தலை பெறலாம். அத்துடன் தலைமுடி வளர்ச்சியும் அதிகமாகும்.
4. இரவில் உங்கள் தலைமுடியைக் கழுவிய பின் தலையணையில் தலையை வைக்கும்போது, முடியில் குறைவான உராய்வு இருக்கும். இதனால் தலைமுடி உதிர்வும் கணிசமாக குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |