நோய்களுக்கு தீர்வாக பழைய சாதம்- தினமும் சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நம்மில் பலருக்கு பழைய சாதம் என்றாலே பிடிக்கும்.
அது மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருப்பதால் பச்சை வெங்காயம் அல்லது ஊறுகாய் இருந்தால் சட்டி சட்டையாக பழைய சோறு சாப்பிடுவார்கள்.
தற்போது அப்படி இல்லாமல் எஞ்சிய அரிசி உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து, தேவை ஏற்படும் பொழுது சூடுப்படுத்தி சாப்பிடுகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீந்த சாதத்தை சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
பகல் சாப்பாடு முடிந்த பின்னர் மிகுதியாக இருக்கும் அரிசி சாதத்தை சாப்பிடுவதால் ஏகப்பட்ட தீமைகள் இருப்பதாக நிபுணர் ஒருவரும் விளக்கமாக கூறியிருக்கிறார்.
அந்த வகையில், பழைய சோற்றை சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்பதை பதிவில் பார்க்கலாம்.
பழைய சோறு
ஊட்டச்சத்து நிபுணர், பழைய சாதம் சாப்பிடுவதை தவிர்க்கவும் வேண்டும். சமைத்த அரிசி உணவுகளை 2-3 மணி நேரம் அப்படியே வைக்கும் போது, அரிசியில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள், பூஞ்சை, பாக்டீரியாக்கள் உருவாக ஆரம்பித்து விடும். அது வேகமாக வளர ஆரம்பித்து உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும்.
அரிசி உணவில் பாக்டீரியா மற்றும் தீங்கு விளைவிக்கும் துகள்கள் மிக விரைவாக வளரும் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் பல மணி நேரத்திற்கு பின்னர் சாப்பிடும் பொழுது அரிசி விஷமாகி வயிற்றில் நச்சுக்களை உற்பத்தி செய்யும்.
சூடுபடுத்தி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
- குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- சிலருக்கு வயிற்றுப்போக்கு அதிகமாகி அவர்களுக்கு சோர்வு ஏற்படலாம்.
- வாயுத்தொல்லை அல்லது அசிடிட்டி பிரச்சினைகள் வரும்.
- வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்சனை இலகுவில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் வரும்.
மீந்த சாதத்தை என்ன செய்வது?
எஞ்சியிருக்கும் அரிசி உணவுகளை குளிர்சாதனப்பெட்டியில் சரியாக சேமித்து வைத்தால் நோய்கள் ஏற்படாமல் தடுக்கலா். அரிசியை சரியான நேரத்தில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும்.
அரிசி தயாரித்த பிறகு, அதை ஒரு கொள்கலனில் வைத்து 2 மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும்.
இப்படி செய்தால் அரிசி உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும். அதே சமயம் சூடுப்படுத்தி சாப்பிடும் பொழுது உடல் ஆரோக்கியத்திற்கும் கெடு வராது.
பலன்கள்
- உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் பழைய சோற்றில் இருப்பதால் சாப்பிடும் பொழுது அவை உடலுக்கு நன்மையை தரும்.
- காலையில் பழைய சோறு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும். அத்துடன் உடலில் இருக்கும் உஷ்ணத்தையும் கட்டுக்குள் வைக்கும்.
- பழைய சோற்றை சாப்பிடும் பொழுது நார்ச்சத்து சத்துக்கள் கிடைக்கும். இது தீர்க்க முடியாத மலச்சிக்கலையும் தீர்க்கிறது. உடலில் இருக்கும் சோர்வும் இல்லாமல் போகிறது.
- உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிய வைக்கும் பழைய சோற்றை பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
- நோய்களுக்கு மருந்தாக மாறி நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |