வலுவான ஆரோக்கியமான பொலிவான கூந்தல் வேணுமா? இந்த ஒரு பொருள் போதும்
பலருக்கும் தலைமுடி என்றால் மிகவும் பிடிக்கும் எல்லோரும் தங்களது தலைமுடி மிகவும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் மனிதன் தன்னை வேலை செய்ய ஊக்கப்படுத்தி அவசரமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறான்.
இதனால் உண்டாகும் தூசு மாசு காரணமாக தலைமுடி மொத்தமாக சேதமடைகின்றது. இது மட்டுமல்லாமல் பொடுகு அழுக்கு போன்றவற்றால் முடி உதிர்வதும் கூடுதலாக இருக்கிறது.
இவ்வாறு சேதமடையும் தலைமுடியினை எவ்வாறு உதிராமல் பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முடி வளர்ச்சி
கிரீன் டீ முடிவளர்ச்சிக்காக பயன்படுத்தப்டுகிறது. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறையவே இருக்கிறது. இது தோலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.
மற்றும் இதில் காணப்படும் பாலிபினால்கள் மயிர்க்கால்களைத் தூண்டுவதற்கும் ஒட்டுமொத்த தலை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.நமது உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளாலும் முடி உதிர்வு வரும்.
இதற்கு மளகு ஒரு சிறந்த தீர்வாக காணப்படுகிறது.இது உச்சந்தலையில் மேம்பட்ட இரத்த ஓட்டம் வலுவான மயிர்க்கால்களுக்கு வழிவகுக்கும் மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கும். மிளகில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
அவை உச்சந்தலையில் சுத்தமாகவும், முடி உதிர்தலுக்கு பங்களிக்கக்கூடிய அசுத்தங்கள் இல்லாமல் இருக்கவும் உதவுகிறது.அடுத்து கெமோமில் தேநீர் இது இனிமையான மற்றும் ஆரோக்கியமான பண்புகளுக்கு பெயர் பெற்றது.
இது முடி வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பு செய்யும் ஒரு தேர்வாக உள்ளது. மன அழுத்தம் ஏற்படுதலும் முடி உதிர்தலுக்கு ஒரு காரணமாக உள்ளதால் இந்த தேனீர் குடிப்பதால் அது இல்லாமல் போகும்.ரோஸ்மேரி இது ஒரு மூலிகையாகும்.
இது முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்தவும் முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவும். இந்த ரோஸ்மேரி டீ குடித்து வந்தால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதனால் மூலிகை டீகளை முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாக காணப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |