வழுக்கை தலையில் முடி வளரணுமா? எண்ணெயை சூடாக்கி இதை கலந்து பூசுங்க
முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம்.
பெரும்பாலான மக்கள் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.ஆனால் இந்தப் பொருட்கள் சில சமயங்களில் முடிக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தும்.
தலைக்கு எண்ணெய் நமக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த எண்ணையுடன் சில பொருட்களை கலந்து போடும் போது அது முடியின் வேர்கால் சென்று வளர்ச்சியை தூண்டும். அது எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
தலைக்கு தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் நிறைந்துள்ளது இதன் காரணமாக இது முடியின் வேர்கால்களுக்கு சென்று முடியை இன்னும் வலுவாக்கும்.
இதன் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எரிச்சலூட்டும் உச்சந்தலையை அமைதிப்படுத்தவும், அடைபட்ட நுண்ணறைகளை அகற்றவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை வளர்க்கவும் சரியானதாக அமைகிறது.
இது தவிர இது ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும். தேங்காய் எண்ணையுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து சூடாக்கி பூச வேண்டும்.
ரிசினோலிக் அமிலம் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆமணக்கு எண்ணெய் சுழற்சியை அதிகரித்து வேர்களை பலப்படுத்துகிறது.
இதற்கு 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் + 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்தால் போதும். இதனுடன் மிளகுக்கீரை அல்லது ரோஸ்மேரி சேர்க்கலாம்.
கொஞ்சம் தேங்காய் எண்ணெயில் கற்றாழை சேர்த்து சூடாக்கி அதை உச்சந்தலையில் தடவி வர வேண்டும்.
இதுபோன்ற பொருட்களுடன் தேங்காய் எண்யை சேர்த்து குளிப்பதற்கு முதல் பூசி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு குளித்தால் முடி இல்லாத இடத்தில் முடி வளர ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |