கர்ப்பத்தின் நடுவே மீண்டும் கர்ப்பமான பெண் - அமெரிக்காவில் நிகழ்ந்த அதிசய சம்பவம்
கர்ப்பத்தின் நடுவில் இளம்பெண் ஒருவர் மீண்டும் கர்ப்பமான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 30 வயதுடைய பெண் காரா வின்ஹோல்ட். இவர் ஏற்கனவே கர்ப்பமாக இருந்துள்ளார். இதனிடையே கர்ப்பமாக இருந்த நிலையில் கர்ப்ப காலத்தில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.
ஏற்கனவே வின்ஹோல்ட் இதற்கு முன்பு 3 முறை கருக்கலைப்பு செய்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த பெண் கர்ப்பமானார்.
ஒரு மாதம் கழித்து, நடத்தபப்ட்ட பரிசோதனையில் அவள் மீண்டும் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.

இந்த தனித்துவமான மருத்துவ நிலையை சூப்பர்ஃபீடேஷன் என்று அழைக்கபடுகிறது. இவை தற்போதைய கர்ப்ப காலத்தில் மீண்டும் கர்ப்பம் உண்டாகிறது.
இது முதல் சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் நிகழலாம் எனக்கூறப்படுகிறது. இறுதியில், பிரசவ நேரத்தில்அவளுக்கு 6 நிமிட வித்தியாசத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தன.
இதுகுறித்து அந்த பெண் வின்ஹோல்ட் தெரிவிக்கையில், எனது கர்ப்ப காலத்தில் நடந்த அனைத்தும் ஒரு அதிசயம் என்று நான் 100% நம்புகிறேன் என தெரிவித்தார். ஏற்கனவே இவருக்கு 4 வயதுடைய மகன் ஒருவர் உள்ளான்.