37 வயதில் கர்ப்பம்.... மகனால் கதறி கதறி அழுத கலா மாஸ்டர் ! குடும்ப ரகசியங்களை கூறி நெகிழ்ச்சி
கலா மாஸ்டர் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரின் மகன் பாடல் பாடி சர்ப்ரைஸ் கொடுத்து கதறி அழ வைத்துள்ளார்.
கலா மாஸ்டர் நிகழ்ச்சியில் தன்னுடைய குடும்பம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது, எனக்கு எப்போதுமே ரோல் மாடல் என்றால் என் அம்மா தான். அவரைப்போல் தைரியசாலி எங்குமே நான் பார்த்ததில்லை.

ஏழு பெண்களை வைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து போராடியவர். எங்களை தைரியத்துடன் வளர்த்தார். அவருடைய தைரியத்தில் தான் நான் இங்கு இப்படி இருக்கிறேன். அதேபோல் என்னுடைய உயிர் என்றால் என் மகன்.
எனக்கு திருமணம் ஆனது, குழந்தை பிறந்தது எல்லாமே தாமதமாகத்தான். 37 வயதின் போது தான் நான் கர்ப்பமாக இருந்தேன். அப்போது பட சூட்டிங் என்று பிசியாக இருந்தால் எல்லோரும் என்னை திட்டுவார்கள். இருந்தாலும் நான் அதைப்பற்றி கவலைப்படாமல் தைரியமாக போனேன்.

எனக்கு கடவுள் கொடுத்த வரம் வித்யுத் என்று கூறினார். உடனே அவர் மகன் வீடியோவில் வந்து கலா மாஸ்டரிடம் பேசுகிறார். அதில் அவர் கலா மாஸ்டருக்காக கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்ற பாடலை பாடியிருந்தார்.
இவர் பாடியதைக் கேட்டு கலா மாஸ்டர் மட்டுமில்லாமல் அங்கிருந்து எல்லோருமே கண் கலங்கினார்கள்.

அந்தளவிற்கு அருமையாக பாடினார். இப்படி கலா மாஸ்டர் மகன் பாடியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்து பலரும் கலா மாஸ்டர் மகன் இப்படி அருமையாக பாடுவாரா!என்று பாராட்டி வருகிறார்கள்.
