புலிக்குட்டியை பூனைக்குட்டிப் போல் தடவிப் பார்த்த பிரபல நடிகை!
பிரபல நடிகை ஊர்வசி ரவுத்தேலா புலிக்குட்டியை பூனைக் குட்டியை தடவுவதை போல தடவிப் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ள இவர், முதல் முறையாக தமிழில் லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.
வெர்சேஸ் பேபியின் பாடல் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில், அங்கே ஷோபாவில் இருந்த வெள்ளை நிற புலிக்குட்டியை பூனைக் குட்டியை தொட்டுப் பார்த்து தடவிக் கொடுப்பதை போல ஊர்வசி ரவுத்தேலா தடவிக் கொடுத்த வீடியோவை வெளியிட்டு தற்போது வைரலாக்கி உள்ளார்.
சமீபத்தில் மும்பையை தாக்கிய டவ் தே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரது பாராட்டுக்களையும் அள்ளி உள்ளார் ஊர்வசி ரவுத்தேலா.
உணவின்றி வாடும் வாயில்லா ஜீவன்களுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் உணவளித்து மகிழ்ந்த போட்டோக்களும் வைரலாகி வருகின்றன.