UPI சர்க்கிள்.... குடும்பத்தினர் அனைவரும் ஒரே வங்கி கணக்கை பயன்படுத்துவது எப்படி?
நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), UPI மூலம் ஒரே வங்கிக் கணக்கினை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது.
UPI சர்க்கிள்
நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) டிஜிட்டல் பேமெண்ட் வசதியை மேம்படுத்தும் நோக்கில் "UPI சர்க்கிள்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
UPI சர்க்கிள் அம்சத்தின் கீழ் இணைக்கப்படும் குடும்பத்தினரும் நண்பர்களும் முதன்மை பயனரின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
சொந்த வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை பயன்படுத்தத் தயங்குபவர்கள் மத்தியில் UPI பயன்பாட்டை விரிவுபடுத்த இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
NPCI வெளியிட்டுள்ள விபரம்
முதன்மை பயனர்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் இவர்களை இரண்டாம் நிலை பயனர்களாக தங்களது வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை மேற்கொள்ளும் அங்கீரகத்தினை கொடுக்கலாம். இதனால் முதன்மை பயனரின் கணக்கிலிருந்து நேரடியாக இரண்டாம் நிலை பயனர்கள் பரிவத்தனையை செய்து கொள்ள முடியும்.
குறித்த அம்சமானது டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள தயங்கும் மூத்த குடிமக்களுக்கும், சிறுவர்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட் வசதியை வழங்க தயங்கும் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த UPI சர்க்கிளில் இரண்டாம் பயனர்களின் செலவு வரமபுகளை நிர்ணயம் செய்து அதற்கேற்ப பணத்தினை அனுப்ப முதன்மை பயனர் முடிவு செய்ய முடியும்.
இதற்கு "Spend With Limits" என்ற இந்த ஆப்ஷன் மூலம் இரண்டாம் நிலை பயனர்கள் கூடுதல் ஒப்புதல் தேவையில்லாமல் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் பணம் செலுத்த முடியும்.
அதே சமயம் ஒவ்வொரு கட்டணத்தையும் முதன்மை பயனர் பார்த்து அங்கீகரிக்கும் வகையில் "Approve Every Payment" என்ற ஆப்ஷனும் இருக்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட தொகை என்ன?
NPCI நிர்ணயித்துள்ள வரம்பின்படி, இரண்டாம் நிலை பயனர்கள் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.15,000 வரை செலவிடலாம்.
ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை மட்டுமே செலவிட முடியும். மேலும், புதிதாக இணைக்கப்பட்ட இரண்டாம் நிலை பயனருக்கு முதல் 24 மணிநேரத்திற்கு ரூ.5,000 செலவு வரம்பு இருக்கும்.
ஒரு முதன்மைப் பயனர் 5 இரண்டாம் நிலைப் பயனர்களைச் சேர்க்க முடியும். ஆனால், இரண்டாம் நிலைப் பயனர் ஒரு முதன்மை பயனரை மட்டுமே ஏற்க முடியும்.
முதன்மைப் பயனர் எந்த நேரத்திலும் இரண்டாம் நிலை பயனரை நீக்கிவிடவும் இதில் ஆப்ஷன் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |