அடுத்த 5 வருடங்களுக்கான படங்களை கைவசம் வைத்திருக்கும் தனுஷ்... முழு பட்டியல் இதோ!
நடிகர் தனுஷ் தான் தற்போது இந்தியாவிலேயே மிகவும் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் கைவசம் உள்ள படங்கள் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் தனுஷ்
ஒரு நடிகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய தனுஷ், தற்போது தயாரிப்பாளராகவும், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
தமிழில் இவர் நடித்த "ஆடுகளம்" திரைப்படம் மிக பெரிய அளவில் பிரபலமானது. இப்படத்திற்காக இவர் தேசிய விருது உள்பட பல விருதுகளை வென்று சர்வதேச அளவில் புகழ் பெற்றார்.
பின்னர் இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் மிகவும் ஜனகரஞ்சகமாக யாரும் ரசிகர்கள் எதிர்பாக்காத அளவில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி பல விருதுகளை வென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நடிகர் தனுஷ், தற்போது தன்னுடைய நடிப்பு திறமையால் ஹாலிவுட் வரை சென்று கலக்கிவிட்டார். தற்போது இவரின் கைவசம் இருக்கும் படங்கள் குறித்த பட்டியல் பற்றி பார்க்கலாம்.
தனுஷ் கைவசமுள்ள படங்கள்
தனுஷ் நடித்து முடித்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.
இதையடுத்து தனுஷ் தனது 50-வது படத்திலும் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை நடிகர் தனுஷே இயக்கியும் உள்ளார். இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி தனது அக்கா மகன் வருணை நாயகனாக வைத்து ஒரு படத்தையும் இயக்க தயாராகி வருகிறார்.
இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் தனுஷ். அப்படியே டோலிவுட் பக்கம் சென்றால், அங்கு தேசிய விருது வென்ற இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் டி51 படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.
இவையெல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை. இதுதவிர அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத சில படங்களும் உள்ளன. இவையெல்லாம் நடித்து முடிக்கவே அவருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தேவை என குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |