தடைகளை தாண்டி கேரளாவில் ஈஸ்வரியுடன் சுற்றித்திரியும் இனியா.. ஆதரங்களை கசிய விட்ட பிரபலம்!
தடைகளை தாண்டி கேரளாவிற்கு ஈஸ்வரியுடன் இனியா கேரளா சென்றுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
அப்பாவை போல் மகன் செழியனும் ஜெனியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இனியாவை கேரளாவிற்கு அழைத்து செல்ல செழியனிடம் பணம் கேட்ட போது அதனை தர மறுத்து ஐஸ்வர்யாவுடன் இரவு நேர உணவு சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.
கேரளாவில் இனியா..
இதனை தெரிந்து கொள்ளாத பாக்கியா, ஈஸ்வரியின் துனையுடன் இனியாவை கேரளாவிற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்.
இது ஒரு புறம் சீரியலில் ஓடிக் கொண்டிருக்கையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இனியா என்கிற நேஹா கேரளாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், செல்வி, ஈஸ்வரி, பாக்கியா, இனியா என நான்கு பேரும் இருக்கிறார்கள். அப்படியாயின் கேரளாவில் தான் அடுத்து வரும் எபிசோட்கள் நகரும் என ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
அத்துடன் இப்படி விறுவிறுப்பாக நகரும் பொழுது, கோபி இனி வரும் காலங்களில் காணாமல் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |