ஜெனியை வீட்டிற்கு அனுப்பி விட்டு.. இன்னொரு பெண்ணை கரம்பிடிக்கும் செழியன் - ஆத்திரமடையும் ரசிகர்கள்!
செழியன் - ஜெனியை பிரசவத்திற்காக அனுப்பி வீட்டிற்கு விட்டு இன்னொரு பெண்ணை கரம்பிடித்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டாப் ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியல் சென்றுக் கொண்டிருக்கின்றது.
இதில், மக்களின் நெஞ்சங்களை வென்று வீட்டிற்கு நல்ல மருமகளாக, மக்களுக்கு சிறந்த உதாரணமாக பாக்கியா விளங்கி வருகிறார்.
புதிய வியாபாரத்தை ஆரம்பிக்க இனியாவுடன் இணைந்து பாக்கியா தன்னுடைய கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார்.
பாக்கியா, கல்லூரிக்கு செல்வது இனியாவிற்கு பிடிக்க வில்லையென்றாலும் பாக்கியா தன்னுடைய முழு முயற்சிக் கொடுத்து படித்து வருகிறார்.
ஐஸ்வர்யாவை கரம்பிடிக்கும் செழியன்
இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் ஜெனிக்கு வளைகாப்பு செய்து பாக்கியாவின் குடும்பத்தினர் அவரின் அம்மா வீட்டிற்கு அனுப்புகிறார்கள்.
இந்த நிகழ்விற்கு கோபி அழையாமல் வருகை தந்து ஜெனியும் செழியனையும் ஆசீர்வதிக்கிறார்.
அத்துடன் ஜெனி வீட்டிற்கு சென்றதும், தனிமையில் செழியனுக்காக வாடும் ஐஸ்வர்யாவிற்கு “நான் இருக்கிறேன்..” என செழியன் கரம் கொடுக்கிறார்.
இந்த காட்சியை பார்த்த பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் ஆத்திரமடைந்ததுடன்“ கோபி போல் தானே பிள்ளையும் இருக்கும் ” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |