கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் - முதல் காதலனை நிர்வாணமாக்கி காதலி சித்ரவதை!
கூலிப்படையை ஏவி முதல் காதலனை நிர்வாணமாக்கி காதலி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
முதல் காதலனை தவிர்த்த காதலி
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரியா (19). இவர் வர்க்கலா செர்னியூரில் வசித்து வருகிறார். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லட்சுமி பிரியாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதற்கிடையில், லட்சுமி பிரியாவுக்கு அதே கல்லூரியில் படிக்கும் இன்னொரு மாணவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, அந்த மாணவரை லட்சுமிபிரியா காதலிக்க தொடங்கியுள்ளார். இதனால், முதல் காதலனை லட்சுமி பிரியா சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த முதல் காதலன், லட்சுமி பிரியாவை சந்தித்து தன்னுடனான காதலை கைவிடக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
ஆனால், லட்சுமி ப்ரியாவிற்கு 2வது காதலன் மீது அதிக மோகம் ஏற்பட்டது. இதனால், முதல் காதலனை மறந்துள்ளார். முதல் காதலனிடம் லட்சுமி ப்ரியா தன்னுடன் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் முதல் காதலன் லட்சுமி பிரியாவை தொடர்ந்து சந்திக்க முயற்சி செய்துள்ளார்.
முதல் காதலனை நிர்வாணமாக்கி காதலி சித்ரவதை
இதனால், ஆத்திரமடைந்த லட்சுமி பிரியா நேற்று முன்தினம் முதல் காதலனை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். லட்சுமி பேச்சை நம்பி முதல் காதலன் சென்றுள்ளார். அங்கு லட்சுமி பிரியாவுடன் 2-வது காதலனும் வந்தார். இருவரும் சேர்ந்து முதல் காதலனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதன் பின்பு, காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் முழுவதும் முதல் காதலனை சித்ரவதை செய்துள்ளனர். அவரை நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளனர். பிறகு, அவரது செல்போனை பறித்து கொண்டு, கையில் இருந்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதற்கிடையே மகனை காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் காதலன் உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காதலி கைது
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், முன்னாள் காதலி, அவரது 2-வது காதலனுடன் சேர்ந்து கடத்தி சென்று சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமி பிரியாவை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் எர்ணாகுளம் பகுதியில் பதுங்கி இருந்தது போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, இன்று அவரை போலீசார் கைது செய்தனர். அவரது 2-வது காதலன் மற்றும் 4 கூட்டாளிகள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.