ஒரு ஆட்டோவில் இத்தனை பேர் பயணமா? ஆடிப்போன போக்குவரத்து அதிகாரிகள்; வைரல் வீடியோ!
ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம் செய்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி போக்குவரத்து காவல்துறையை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் பிந்தி கோட்வாலி மற்றும் ஃபதேபூர் இடையே ஒரு ஆட்டோவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என 27 பேர் பயணம் செய்துள்ளனர்.
மின்னல் வேகத்தில் சென்ற அந்த ஆட்டோவை துரத்தி பிடித்த போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆட்டோவை ஓரங்கட்டினர்.

அப்போது உள்ளே இருந்து 27 பேர் பக்கமாக இறங்கியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ந்துபோன அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் இது போன்ற சம்பவம் அங்கு நடப்பது முதன் முறை அல்ல, 2021ல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 6 நாட்கள் தொடர்ச்சியாக அதிகமாக ஆட்களை ஏற்றிய ஆட்டோக்கள் ரெய்டு செய்யப்பட்டன. அப்போது 630 ஆட்டோக்கள் சிக்கின இருக்கின்றன என கூறப்படுகிறது.
जनसंख्या विस्फोट का दुष्परिणाम
— Ashwini Upadhyay (@AshwiniUpadhyay) July 11, 2022
ऑटो एक और सवारी सत्ताईस? pic.twitter.com/ex7QCiRJTp