அம்பலமாகும் குணசேகரனின் நாடகம்.. உண்மையறியும் சக்தி- தேவகி யார்?
குணசேகரன் தான் ஈஸ்வரியின் இந்த நிலைக்கு காரணம் என தெரிந்தும் அவர் ஆடும் நாடகத்தை வீட்டிலுள்ளவர்கள் பொறுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தேவகி பற்றிய ரகசியம் வெளியில் வர துவங்குகிறது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில், ஆதி குணசேகரன் தன்னுடைய மனைவி ஈஸ்வரியை தலையில் தாக்கி கோமா அளவுக்கு கொண்டு சென்று விட்டார்.
அவர் தாக்கிய காணொளி ஈஸ்வரியின் செல்போனில் இருந்ததை கண்டுபிடித்த அறிவுக்கரசி அந்த காணொளியை வைத்து குணசேகரனை மடக்கினார். ஆனாலும் அசந்த நேரத்தில் விழித்து கொண்ட ஆதி குணசேகரனை அறிவுக்கரசியை சிறைக்கு அனுப்பி விட்டு, அன்புக்கரசியின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி வீட்டில் வைத்திருக்கிறார்கள்.

புதிதாக திருமணம் செய்த பார்கவி- தர்ஷன் இருவரின் வாழ்க்கையிலும் அன்புக்கரசி ஒரு பக்கம் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
தேவகியாக வருபவர் யார்?
இந்த நிலையில, ஆதாரங்கள் அனைத்தையும் தன்வசம் வைத்திருக்கும் சக்தி- ஜனனி இருவரையும் பார்த்து குணசேகரன் 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருக்கிறார். இப்படி அவர் வீட்டிலுள்ளவர்களை கொலைச் செய்ய துணிந்த சமயத்தில் புது வில்லன் கதைக்குள் வருகிறார்.
அவர், குணசேகரன் வீடு அமைந்திருக்கும் பகுதியில் ஒரு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்ட இருப்பதாகவும், அதற்காக அந்த வீட்டை விலை பேச வந்திருப்பதாகவும் தன்னுடைய உதவியாளரை அனுப்பி பேரம் பேசுகிறார். ஆனாலும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நடுவில் வந்த கதிர் அந்த நபரை தர தரவென இழுத்துச் சென்று கதிர் வெளியே போடுகிறார். அந்த சமயத்தில் பிரச்சினை செய்யாமல் புது வில்லன் கிளம்பி விடுகிறார்.

இதற்கிடையில் வீட்டை விட்டு சென்ற சக்தி ஒருவழியாக கடிதம் எழுதப்பட்ட இடம் மற்றும் குறித்த பெண் பெயர் பற்றிய விடயங்களை தெரிந்து கொள்கிறார். ஜனனியும் அவர் பக்கம் இருந்து குணசேகரன் பற்றிய ஆதாரங்களை திரட்டிக் கொண்டிருக்கிறார்.
தற்போது கதைக்குள் புதிதாக உள்ளே வரும் தேவகி என்ற பெண்ணின் கதையை தெரிந்து கொள்ள சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. துரத்திவிடுகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |