ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைகாட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் உள்ள சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் பாக்கியா - கோபி இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து புதிய திருப்பமாக பாக்கியா - கோபி - ராதிகா என மூன்று கதாபாத்திரங்கள் வைக்கப்பட்டது.
தற்போது பாக்கியாவிற்கு துணையாக பழனிசாமி என்ற கதாபாத்திரம் வைக்கபட்டுள்ளது. 40 வயதை தாண்டிய இரு ஜோடிகள் தனது வாழ்க்கைக்கு தேவையான ஒரு துணையை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த சீரியலின் கதைக்களம் கொண்டு செல்லப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா எனும் சுஜித்ராவிற்கு சீரியலில் நிறைய சீன்கள் வைக்கபடுகிறது.
இவர் தான் தற்போது இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
இனியாவின் இந்த முடிவிற்கு காரணம் என்ன?
இந்த நிலையில் ராதிகா அடுத்தடுத்து கஷ்டமான டாஸ்க்களை பாக்கியாவிற்கு கொடுத்து வருகிறார். இதனால் பாக்கியாவும் அவரின் கேண்டினுக்கு கேக் வகைகளை செய்து வைத்துள்ளார்.
இதனை பார்த்த ராதிகா பேச வழியில்லாமல் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார். இனியாவை செல்போனை வைத்து தூங்குமாறு கோபியும் ராதிகாவும் கூறியதால் கோபமடைந்து தாத்தாவின் மருந்து வில்லைகளை எடுத்து இனியா குடித்து விட்டார்.
இதனை தொடர்ந்து இனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை பாக்கியாவிடம் கூறிய போது அவர் அழுது புலம்பியுள்ளார்.
இந்த சீன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ கோபிக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும் ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.