கமல்ஹாசனிடம் காதல் சொன்ன நடிகை... கமல் இப்படி சொல்லிட்டாரா?
லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கல்லூரிகால நெகிழ்ச்சியான காதல் கதை குறித்து வெளிப்படையாக பேசியவிடயம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
லட்சுமி ராமகிருஷ்ணன்
பொய் சொல்லப்போறோம், எல்லாம் அவன் செயல், ஈரம், நாடோடிகள், ஆதவன், ஆண்மை தவறேல், யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
நடிகையாக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் முத்திரை பதித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் ஆரோகணம் என்ற திரைப்படம் வெளியானது.
அதனை தொடர்ந்து நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர், ஆர் யூ ஓகே பேபி போன்ற திரைப்படங்களையும் அவர் இயக்கினார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இந்த தொடர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. சினிமாவை தாண்டி இந்த நிகழ்ச்சி லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பெரிய அளவில் அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது
தற்போது குக் வித் கோமாளி சீசன் 6ல் நிகழ்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார்.
இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசனிடம் காதலி சொன்ன விஷயம் பற்றி பகிர்ந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவர் குறிப்பிடுகையில், கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து நான் கமல் ஹாசனின் தீவிரமா ரசிகை. அதுமட்டுமில்லாமல் அவரை காதலிக்கவும் செய்தேன். சினிமாவுக்கு வந்தப்பின் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது எனது மனதில் இருந்த காதலையும் அவரிடம் சொல்ல சென்றேன். ஆனால் அவரோ தங்கச்சி என சொல்லி டிவிஸ்ட் கொடுத்துவிட்டார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |