பாக்கியாவை அசிங்கப்படுத்திய ராதிகா! விடாமல் பதிலடி கொடுத்த வைரல் காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கணவரிடம் இருந்து வீட்டை மீட்க பாக்கியா பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.
சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இவருக்கே மக்களின் வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.
கோபி கொடுத்த நெருக்கடி
சமீபத்தில் எழில், அமிர்தா திருமணத்தினை, பாக்கியா குடும்ப நபர்கள் அனைவரையும் எதிர்த்து திருமணத்தினை வெற்றிகரமாக நடத்தி வைத்துள்ளார்.
இத்தருணத்தில் கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேற கூறி நெருக்கடி கொடுத்துள்ளார். கோபியின் தந்தை தனது சொத்தை எடுத்துக்கொள் என்றும் வீட்டை மட்டும் விட்டுவிடு என்று கூறியுள்ளார்.
ஆனால் தந்தையின் சொத்தையும் வாங்கிக்கொண்டு வீடு பாக்கியாவிற்கு சொந்தமாக வேண்டும் என்றால் இன்னும் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அசிங்கப்படுத்தும் ராதிகா
கோபியின் நெருக்கடிக்கு பாக்கியா சம்மதித்து ஒரு மாதத்தில் பணத்தினை கொடுப்பதாக கூறி, சில தினங்களுக்கு முன்பு 2 லட்சம் ரூபாய் காசோலையைக் கொடுத்து கோபியை நடுங்க வைத்துள்ளார்.
தற்போது ராதிகாவின் அலுவலகத்தில் சமைக்கும் காண்ட்ராக்ட்டை பாக்கியா பெற்றுள்ள நிலையில், இதனால் பொறாமையில் பொங்கியி எழுந்த ராதிகா அவரிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்.