பெண்களின் 5000 உள்ளாடைகளை திருடிய திருடன் - தீவிர தேடுதலில் போலீசார்!
பொதுவாக திருடர்கள் கார், பைக், பணம் என பல பொருட்களை திருடி தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இங்கு திருடன் திருடி பொருள் தான் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னின் வடக்கிலுள்ள நீர் தேக்கம் பகுதியில் உள்ள ஹிக்போர்ட் என்ற தெருவில் தொடர்ச்சியாக நடந்து வந்த கொள்ளை சம்பவங்களின் அடிப்படையில், போலீசார் நடத்திய அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது, 5,000க்கும் மேற்பட்ட பெண்களின் உள்ளாடைகள் ஆண் ஒருவர் வசிக்கும் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதன் பின்னர் ஆடைகளை திருடியவர் யாராக இருந்தாலும் தாமாக முன்வந்து சரணடையுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பின், இந்த திருடன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியின் மூலம் உடனடியாக தகவல் கொடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.