வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்த நபரை தாக்கிய மின்னல்! கையில் ஏற்பட்ட காயம்; நடந்தது என்ன?
வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் மின்னல் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ளது.
பிரித்தானியாவில், அபிங்டனில் வசிக்கும் 33 வயதுடைய எய்டன் ரோவன் (Aidan Rowan) என்ற நபர் செப்டம்பர் 5 அன்று தனது ப்ளே ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார்.
அப்போது, இரவு 10:30 மணியளவில் உரத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அவரது உடலில் ஏதோ தாக்கியது போல் ஒரு உணர்வு ஏற்பட்டு இருக்கிறது.
இதன் பின்னர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு மின்னல் தாக்கியது போல் தெரிகிறது என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து 8 மணிநேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவரை, அதன் பின்னர் சிகிச்சைக்கு பின் மருந்துகளுடன் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து, Aidan Rowan தெரிவிக்கையில், “நான் சோபாவில் அமர்ந்து கேம் விளையாடிக் கொண்டிருந்தேன்., வெளியே இடித்துக் கொண்டிருந்தது.
அப்போது, நான் மிகவும் கனமான உணர்வை உணர்ந்தேன், பின்னர் என் வலது கையில் இப்போது தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதை அறிந்தேன்” என தெரிவித்தார்.
மேலும், அவரது இதயத் துடிப்பு ஆரம்பத்தில் ஒழுங்கற்றதாக இருந்தது, ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு வந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.