முதல் தேர்தலிலேயே கெத்து காட்டிய உதயநிதி- எத்தனை ஆயிரம் வாக்குகள் முன்னிலை தெரியுமா?
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இதனையடுத்து, கட்சிகளின் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2) நடைபெற்று வருகிறது.
இதில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது.
மேலும், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாமக சார்பில் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
தற்போது, உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அவர் 3933 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார். உதயநிதி 3933 வாக்குகளும், பாமக வேட்பாளர் கசாலி 652 வாக்குகளும் பெற்றுள்ளனர்.